1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sa chandrasekar denied that vijay given money

விஜய் எனக்கு காசு கொடுத்தார்.. ஆனா அது கடன் இல்ல!.. எஸ்.ஏ.சி பேட்டி!...

sa chandrasekar
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் வேட்புமனுவில் அசையும், அசையா சொத்து மற்றும் தனக்குள்ள கடன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

அந்த வகையில் விஜய் தனது வேட்புமனுவில் 600 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாகவும் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு 3.02 கோடி பணம் கொடுத்திருப்பதாகவும், தாய் சோபா சந்திரசேகருக்கு 87 லட்சம் கொடுத்திருப்பதாகவும், மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி கொடுத்திருப்பதாகவும், மகன் சஞ்சய் ஜேசனுக்கு  8.78 லட்சம் கடன் கொடுத்திருப்பதாகவும், மகள் திவ்யா சாசாவுக்கு 4.6 லட்சம் கொடுத்திருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்

இது பேச பொருளாக மாறியது. சொந்த அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்த பணத்தை கடன் என விஜய் குறிப்பிட்டிருக்கிறார் என பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள்.. நாம் தமிழர் கட்சி, திமுக போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பாவுக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை கடன் என தவறாக பரப்பி விட்டார்கள்.. 200 கோடி சம்பாதிக்கும் ஒருவர் தன் அப்பாவுக்கு 5 கோடி கொடுக்க கூடாதா? பணம் கொடுத்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை கடன் என்ற ஒரு குறிப்பிடவில்லை.. விஜயை பிடிக்காதவர்கள் இப்படி அவரை விமர்சனம் செய்கிறார்கள்’ என விளக்கம் அளித்திருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - எஸ்.ஏ.சி. அளித்த விளக்கம்!