தொடர்புடைய செய்திகள்
- ஓய்வுக்கு கொஞ்சம் ஓய்வு.. திரும்ப வரும் ரோஹித் சர்மா? - கலகலக்கும் இலங்கை டி20 தொடர்!
- டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் இல்லையா?... பிசிசிஐ குறிவைக்கும் வீரர் இவர்தான்!
- விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி.. தொடர்ந்து முதலிடத்தில் லைகா கோவை அணி..!
- இலங்கை தொடரில் ஓய்வு கேட்கும் ஹர்திக் பாண்ட்யா! அப்ப யாரு கேப்டன்?
- பிசிசிஐ பக்கம் சாயும் ஐசிசி… அதிருப்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தம்மிகா நிரோஷனா. முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அவரை கொன்றவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர் யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது/ இலங்கை போலீசார் கொலை செய்யப்பட்ட தம்மிகா நிரோஷனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கும்பல் மோதலால் நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இலங்கை போலீஸ் அறிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் இலங்கை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
