1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister explain about tempel land issue

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ramesh
பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புடைய 1.40 ஏக்கர் நிலம் இருவரின் பெயர்களில் வெறும் 2 கோடிக்கு முறையீடாக பத்திரப்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் அந்த நிலத்தை அமைச்சர் ரமேஷின் உறவினர் வாங்கியிருப்பதாகவும், அதில் ரமேசுக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகார் சொல்லி வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் ரமேஷ் ‘
உண்மை என்னவென்று தெரியாமல் பேசுகிறார்கள்.. தவெக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்.. எனது சொந்தக்காரர் 100 கோடி நிலத்தை வாங்கியிருப்பதாக பொய்யாக செய்தி பரப்புகிறார்கள் ..இதை நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்..

நிலத்தை பதிவு செய்த சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.. கோயில் நிலத்தை ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. என் மீது பொய்யாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’
என அவர் கூறியிருக்கிறார்.