செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஜூலை 2024 (17:51 IST)

ஓய்வுக்கு கொஞ்சம் ஓய்வு.. திரும்ப வரும் ரோஹித் சர்மா? - கலகலக்கும் இலங்கை டி20 தொடர்!

இலங்கையில் நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணிக்காக ரோஹித் சர்மா விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இலங்கை - இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இலங்கையில் ஜூலை 27ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சமீபத்தில் உலகக்கோப்பை டி20-ல் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து முக்கிய வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய அணிக்கான அடுத்த டி20 ஸ்குவாடை கட்டமைக்கும் பணியில் பிசிசிஐ உள்ளது.

இந்நிலையில் இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு எடுத்துள்ளார். விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, அணியை வழிநடத்தப்போவது யார்? மாற்று வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று இலங்கை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது இலங்கை தொடரில் விளையாட விரும்புவதாக ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இல்லாத பட்சத்தில் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி கேப்பிட்டன்சி செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Edit by Prasanth.K