1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (07:29 IST)

விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி.. தொடர்ந்து முதலிடத்தில் லைகா கோவை அணி..!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று லைகா கோவை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

நேற்று லைகா கோவை அணி மற்றும் திருச்சி அணிகள் மோதிய போட்டி நடந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர் களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. சஞ்சய் யாதவ் மற்றும் ஜாபர் தமால் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று விளையாடி நிலையில் கிட்டத்தட்ட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டம் இழந்தனர்.

 இதனை அடுத்து 125 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லைகா கோவை அணி விளையாடிய நிலையில் முதல் ஓவரிலேயே சுரேஷ்குமார் விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரரான சுஜய் அபாரமாக விளையாடி 48 ரன்களும் முகிலேஷ் 63 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுவரை லைகா கோவை அணி நான்கு போட்டிகளில் விளையாடிய நிலையில் நான்கிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva