1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk planing to make videos with actors and actress

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அதேநேரம் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது.

ஒருபக்கம் அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்று விட்டால் என்ன செய்வது என்கிற எண்ணத்தில் மற்ற கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தவெகவில் சேர்த்து வருவதாகவும் புகார் அளித்திருக்கிறது.. இதுவரை அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் தவெகவிடம் சென்றுவிட்டனர்.

அதாவது, தவெகவிடம் தற்போது 106 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள். இன்னும் 12 எம்.எல்.ஏக்கள் கிடைத்துவிட்டால் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடும். எனவே மற்ற கட்சிகளில் இருந்து 12 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அந்த தொகுதி இடைத்தேர்தலில் அவர்களை தவெக வேட்பாளராக நிறுத்தி முதல்வர் விஜயை வைத்து பிரச்சாரம் செய்ய வைத்து அவர்களை வெற்றி பெற வைத்து தனி பெரும்பான்மையை பெற வேண்டும் என தவெக முகாம் நினைப்பதாக தெரிகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை அதிமுகவும், திமுகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக அந்த 2 கட்சிகளும் கூறிவருகிறது. இந்நிலையில்தான்,  தவெகவுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளை பேச வைக்க தவெக முகாம் திட்டமிட்டிருக்கிறதாம். ஆட்சியின் 100வது நாள் முடிவில் திரைப் பிரபலங்களை வைத்து விளம்பர படம் எடுக்கும் திட்டமும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.


அடுத்த கட்டுரையில்
பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..