1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (07:49 IST)

டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் இல்லையா?... பிசிசிஐ குறிவைக்கும் வீரர் இவர்தான்!

இந்திய அணி இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் அடுத்து இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுப் பயணத்த்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த தொடரின் டி 20 போட்டிகளுக்கான அணியில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பிசிசிஐ, 2026 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை வரை இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.  அதன் பின்னர்தான் ஹர்திக் பாண்ட்யாவுக்கான வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.