1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji wrote a letter to tn police

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

senthil balaji
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக அக்கட்சியின் எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் ரூ..35 கோடி வரை பேரம் பேசிய வழக்கில் இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் சிலர் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சொல்லியே  பேரம் நடத்தினோம் என காவல் துறையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனவே அசோக்குமார் மற்றும் செந்தில் பாலாஜி இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென போலீஸ் சார்பில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் தற்போது வரை செந்தில் பாலாஜியும், அவரின் சகோதரரும் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில்,  காவல்துறையினருக்கு செந்தில் பாலாஜி ஒரு கடிதம் எழுதியுள்ளார்,

“காவல்துறையினர் பதிவு செய்துள்ள இந்த வழக்கில் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக்குமாரின் பெயரோ முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. வழக்கில் பெயரே இல்லாத போது எங்களை எப்படி விசாரணைக்கு ஆஜராகும்படி கூற முடியும்? எனவே, சட்ட நடைமுறைகளின்படி எனக்கு 35 Clause (3) BNS பிரிவின் கீழ் முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.

நான் இந்த வழக்கின் கீழ் விசாரணைக்கு ஆஜராகும் பட்சத்தில், பழிவாங்கும் நோக்கில் என்னை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என உறுதி அளிக்க வேண்டும்.

நான் ஒரு மக்கள் பிரதிநிதி மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். நான் சட்டத்திற்குப் பயந்து எங்கும் ஓடி ஒளியவில்லை. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நான் கையெழுத்திட அல்லது விசாரணைக்கு ஆஜராகும் போது, எனக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைன் மூலமே நாமே பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..