1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. southern railway announced extra train in tambaram

எழும்பூர் போக தேவையில்லை!.. தாம்பரத்திலிருந்தே எக்ஸ்பிரஸ் ரயில்!.. வெளியான அறிவிப்பு...

tambaram
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களை பொறுத்தவரை வெளியூருக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல வேண்டுமெனில் சென்ட்ரல் அல்லது எழும்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்குதான் செல்ல வேண்டும்..

அதில் பல ரயில்கள் எழும்பூரில் இருந்தும், பல ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன. எனவே தாம்பரம், கிண்டி போன்ற பகுதியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குதான் மக்கள் செல்ல வேண்டியிருக்கிறது..

இதனால் நிறைய போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக தாம்பரம் ரயில் நிலைய பாதைகளின் எண்ணிக்கையை 10 லிருந்து 15 ஆக உயர்த்தும் புதிய திட்டத்தை தெற்கு ரயில்வே முன்மொழிந்துள்ளது..

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்தால் தெற்கு மற்றும் வடக்கு வழித்தடங்களில் இயக்கப்படும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களை தாம்பரத்திலிருந்தே இயக்க முடியும்.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேற்றைய விஜய்யின் பேச்சை கேட்டவர்களின் எண்ணிக்கை 2.3 கோடி.. கிட்டத்தட்ட தமிழ்நாட்டு ஜனத்தொகையில் கால்வாசி...