தொடர்புடைய செய்திகள்
- குளறுபடி இருந்தால் மறு வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...
- 2026 சட்டமன்ற தேர்தல்!.. 85.15 சதவீத வாக்குப்பதிவு!.. வரலாறு படைத்த தமிழ்நாடு!..
- இது ரிக்கார்ட்!... சென்னையில் 26 சதவீதம் அதிக வாக்குப்பதிவு!..
- தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..
- 6 மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம்!. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
ஓட்டு போட வராத செந்தில் பாலாஜி!. மு.க.ஸ்டாலின் சொல்லியும் கேட்கலயே!..
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அங்கு அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் அமைச்சர் பதவியை இழந்தார்.
செந்தில் பாலாஜி இருந்தால் கரூரில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது முக ஸ்டாலின் நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் செந்தில் பாலாஜி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்ததால் இந்த முறை அவரை கோவையில் களமிறக்கினார் முக ஸ்டாலின். அதோடு, கோவை திமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செந்தில் பாலாஜியை நியமித்தார்.
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை. வழக்கமாக செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர் ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையத்தில் உள்ள வாக்கு சாவடியில்தான் வாக்களிப்பார். ஆனால் நேற்று காலை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அங்கு வந்து வாக்களித்த போது அண்ணன் வருவார் என அவர் சொல்லிவிட்டு சென்றார்.
ஆனால் மாலை 6 மணி ஆகியும் செந்தில் பாலாஜி அங்கு வந்து வாக்களிக்கவில்லை
. செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாலும், கோவைக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்ததால் அவர் கரூருக்கு வாக்களிக்க வரவில்லை என சொல்லப்படுகிறது. அனைவரும் தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் செந்தில் பாலாஜியே அதை பின்பற்றவில்லை என அதிமுகவினர் பேசி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரையில்