1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission given offer to chennai people

6 மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம்!. தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

vote
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் நடைபெறுகிறது.
வழக்கத்திற்கு மாறாக இன்று காலை முதலே வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நடைபெற்றது.

பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர்.
அதன் காரணமாக மாலை 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருந்தது.
கடந்த பல சட்டமன்ற தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த வாக்குப்பதிவு அதிகம் என்றே சொல்லலாம்.

மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.எப்படியும் தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வாக்குச்சாவடிக்கு ஆறு மணிக்குள் வந்தால் 8 மணி வரை ஓட்டு போடலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

இது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்களிக்க அனுமதிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழக சட்டசபை தேர்தல்!. வாக்குப்பதிவு நிறைவு!.. கரூரில் அதிக வாக்குப்பதிவு!..