2026 சட்டமன்ற தேர்தல்!.. 85.15 சதவீத வாக்குப்பதிவு!.. வரலாறு படைத்த தமிழ்நாடு!..
2026ம் வருடத்திற்கான சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் பலரும் வாக்களிக்க ஆர்வம் காட்டியதால் வாக்கு பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 6 மணிக்குள் வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு சில வாக்குச்சாவடுகளில் 8 மணி வரையும் சில வாக்குச்சாவடிகளில் 9 மணி வரையும் கூட வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில் 76 ஆண்டுகால சட்டசபை தேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் இந்த முறை 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
இதுவரை நடந்த 16 சட்டமன்ற தேர்தல்களில் அதிகபட்சமாக 2011ம் வருடம் 78.2 சதவித வாக்குகள் பதிவானது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 73.6 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 4.63 கோடி பேர் வாக்களிக்க நிலையில் இந்த முறை நேற்று மாலை 5 மணிக்கே 4.76 கோடி பேர் வாக்களித்து விட்டனர்..
2021 சட்டமன்றத் தேர்தல் ஒப்பிடும்போது 2026 தேர்தலில் 12.09 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருக்கிறது . தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 93.40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல் சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. தமிழகத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற மே 4ம் தேதி நடைபெறவிருக்கிறது. மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.