1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election officers will check the evm meachine today

குளறுபடி இருந்தால் மறு வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...

vote
தமிழகத்தில் 2026ம் வருடத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் நேரம் கொடுத்திருந்தது. அதேநேரம் பல தொகுதிகளில் ஆறு மணிக்கும் பலரும் வரிசையில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணி முதல் 9 மணி வரை வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டது..

பல வருடங்களுக்கு பின் தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்திருக்கிறது. இந்த வாக்குப்பதிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதை பார்க்கும்போது வாக்களிக்க ஆர்வம் காட்டாத இளம் தலைமுறையினர் பலரும் வாக்களிக்க முன் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக தவெக லைவர் விஜயை பலரும் சொல்கிறார்கள்..

அவரின் அரசியல் வருகை இளைஞர்களை ஓட்டு போடத் தூண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதால் ஓட்டு எண்ணிக்கையில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? யார் ஆட்சி அமைப்பார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.. வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஒருபக்கம் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வுபடுத்தப்பட்டிருக்கிறது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்பட்டன. அதேபோல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரி பார்ப்பார்கள். அதில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
2026 சட்டமன்ற தேர்தல்!.. 85.15 சதவீத வாக்குப்பதிவு!.. வரலாறு படைத்த தமிழ்நாடு!..