1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sp velumani getting more response than eps

பழனிச்சாமிக்கு மவுசு போச்சு!.. சட்டசபையில் கெத்து காட்டிய எஸ்.பி.வேலுமணி!...

sp velumani eps
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில் தவெக முதலிடத்திற்கும், திமுக இரண்டாம் இடத்திற்கும் சென்றது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. நாம் தமிழர் கட்சி 4வது இடத்திற்கும் சென்றது. அக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அதிமுகவின் பொதுச்செயலாளராக முதல்வர் பழனிச்சாமி பொறுப்பேற்றபின் அந்த கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுவும் இந்த முறை எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமர முடியாத நிலை. இதனால்,  எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மீது கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தனியாக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக அவர்கள் அதிமுக எம்எல்ஏ அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்...

மேலும், அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியை தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. முதலில் சட்டமன்றத்தில் பழனிச்சாமியின் பதவியை பறித்துவிட்டு மெல்ல மெல்ல அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முக்கிய பதவிக்கு அவர்கள் வருவதற்கும் முடிவு செய்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இன்று சட்டசபை கூடிய போது எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் பழனிச்சாமியை விட வேலுமணி பதவியேற்றபோது அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றது குறிப்பிடத்தக்கது..
அடுத்த கட்டுரையில்
தவெகவில் இணையும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!...