1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan replied to dmk minster ramachandiran

விஜய் இருக்கும்வரை உங்க தலைவர் வரமாட்டார்!.. சட்டசபையில் காரசார வாக்குவாதம்!..

sengotayan
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதல்வரானார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டது. விஜயும் முதல்வராகிவிட்டார். அதோடு, திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

எனவெ, 74 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக எதிர்கட்சியாகிவிட்டது. அக்கட்சியின் எம்.எல்.ஏ உதயநிதி எதிர்கட்சி தலைவராகிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் ‘அப்பாவை காணோம்.. கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க’ என பேசியிருந்தார். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் ஏசிய திமுக எம்.எல்.ஏ கே.கே.என்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ‘மக்களின் கண்ணீரை துடைக்கும் முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டார். திமுக ஆட்சி மீண்டும் வரும். அப்பாவை காணோம் என சொல்கிறீர்கள். நீங்கள் யாரும் கோபித்துக்கொள்ளக்கூடாது. அவர் இங்கு வருகிற போது நீங்கள் யாரும் இங்கு இருக்கமாட்டீர்கள்’ என சொன்னார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன் ‘முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை நீங்கள் யாரும் தலை தூக்க முடியாது’ என கூறினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?