சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் முக்கிய அதிகாரி விலகல்.. ஓபன்ஏஐ' நிறுவனத்திற்கு பின்னடைவா?
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனமான 'ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான பிராட் லைட்கேப் தனது பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சாம் ஆல்ட்மேனின் வலது கரமாக கருதப்படும் இவர், கடந்த 2018 முதல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். புதிய தொழில் தொடங்குவதற்காக விலகுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது எக்ஸ் தளத்தில் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனம் ஐபிஓ எனப்படும் பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வரும் சூழலில், உயர் அதிகாரிகளின் தொடர்ச்சியான விலகல் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராட் லைட்கேப்பின் விலகலுக்கு சாம் ஆல்ட்மேன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறிய ஆராய்ச்சி மையமாக இருந்த ஓபன்ஏஐ நிறுவனத்தை, பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டும் வணிக நிறுவனமாக மாற்றியதில் லைட்கேப்பின் பங்கு மிக முக்கியமானது. நிறுவனத்தின் நிதி மற்றும் வணிக பிரிவுகளைத் தொடங்கிய அவர், தற்போது புதிய முயற்சிகளுக்காக வெளியேறுகிறார். முன்னதாக பல முக்கிய தலைவர்கள் விலகியதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
