1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. school and colleges holiday for two days

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை நவம்பர் 10 மற்றும் நாளை மறுநாள் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் 
 
 
அடுத்த கட்டுரையில்
ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுவது ஏன்?