1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools and Colleges are leave for some districts

தொடர் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

பள்ளிகள்
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சற்று முன் வெளியான தகவலின்படி தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி. திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சில மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
விழுப்புரம் தளவானூர் தடுப்பணை உடைந்தது: விவசாயிகள் கவலை!