1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sasikala planning to keep allinace with tvk

தவெகவுடன் பேச்சுவார்த்தை?.. காய் நகர்த்தும் சசிகலா!.. விஜய் சம்மதிப்பாரா?...

vijay sasikala
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அந்த கட்சிக்கு சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தார்கள்.. அதோடு அவரை முதல்வராக அறிவிக்கவும் திட்டமிட்டார்கள்.. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.

சசிகலா சிறையில் இருந்த நான்கு வருடங்களில் அதிமுக கட்சி மற்றும் ஆட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை இனிமேல் கட்சியில் சேர்க்க முடியாது எனவும் அறிவித்தார்.. இது சசிகலா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மத்தியில் ஆளும் பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாக இருந்தது..

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. ஒருபக்கம் திமுக, ஒருபக்கம் விஜயின் தவெக, ஒரு பக்கம் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது..

டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை எனக்கு தெரிகிறது. இந்நிலையில் ஒரு கட்சியோ அல்லது இயக்கமோ ஆரம்பித்து தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் சசிகலா இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. தவெக நிர்வாகிகள் விரைவில் சசிக்கலாவை சந்திக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை?.. விஜய் இதற்கு சம்மதிப்பாரா? என்பதெல்லாம் விரைவில் தெரிந்து விடும்.
அடுத்த கட்டுரையில்
விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி