1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (19:23 IST)

நான் பண்ணதுக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்ல!.. மன்னிப்பு கேட்ட பாடகர் வேல்முருகன்...

vijay
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூர் சம்பவத்திற்கு பின் சோகமான மனநிலையில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன்பின் ஒரு வழியாக அதிலிருந்து மீண்டார்.. அதேநேரம் அவரின் ஜனநாயகன் படம் இதுவரை வெளியாகவில்லை. ஒருபக்கம் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை சந்திக்க இரண்டு முறை டெல்லிக்கு சென்றார். எனவே இது விஜயை மிகவும் பாதிக்கும் என அவரின் ரசிகர்களும், தவெகவினரும் கருதினார்கள்.

ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டதை கொண்டாடும் வகையில் தவெக மூன்றாவது ஆண்டு துவக்க விழா பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் சில பாடல்களை பாடினார். அப்போது ‘உங்கள் பாடலுக்கு உங்களுடன் நடனம் ஆடலாமா?’ என விஜய் கேட்க அவர் மிகவும் சந்தோஷப்பட்டு ‘மருதமலை மாமணியே’ பாடலில் விஜய் பெயரை குறிப்பிட்டு வார்த்தைகளை மாற்றி பாடலை பாட விஜய் அதற்கு நடனம் ஆடினார்.

அந்த வீடியோவும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து முருகன் கடவுள் தொடர்பான பக்தி பாடலில் விஜயின் பெயரை கலந்து வேல்முருகன் பாடியது தவறு என பலரும் திட்டத் தொடங்கினார்கள்.. ஒரு சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்..

இந்நிலையில் ‘நான் பாட்டு பாடியதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவரை உற்சாகப்படுத்தவே அந்த வரிகளை பாடினேன்.. முருகனை அவமதிப்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வதற்கு சமம். என கை கூப்பி மன்னிப்பு கோரினார் பாடகர் வேல்முருகன்.