வெள்ளி, 6 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 4 பிப்ரவரி 2026 (10:30 IST)

அதிமுகவை விட அதிக ஓட்டு!.. 18 சதவீத வாக்குகளை தவெக பெறும்!.. கொளுத்திப்போட்ட பிரவீன் சக்ரவர்த்தி..

eps vijay
கடந்த 50 வருடங்களாகவே தமிழக அரசியலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும்தான் போட்டி இருந்தது.. ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வரவேற்பு விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்திருப்பதாக தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.. இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவாகியிருக்கிறது. தனித்துப் போட்டியிட்டாலும் அந்த கட்சி 18 சதவீத வாக்குகளை பெறும்.
விஜயை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. அது எல்லோருக்கும் தெரியும்.. தனித்து போட்டி போட்டாலும் தவெக வலுவாக இருக்கிறது. விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற பேச்சு இருக்கிறது..

தவெகவின் வளர்ச்சி பாராட்டுக்குறியது. தவெகவுக்கு வாய்ப்பளிப்பதில் இளைஞர்கள், பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் விஜயை ஏற்றுக்கொண்டிருப்பது என்னுடைய ஆய்வுகளில் தெரியவந்தது. வரும் தேர்தலில் அதிமுகவை விஜய் பின்னுக்கு தள்ளுவார். நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை விட தவெக அதிக வாக்குகளை பெறும்’ என சொல்லியிருக்கிறார்.