செவ்வாய், 3 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (22:28 IST)

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!...

sv sekar
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்வது அறியாமை.. என் பேரன் என்னிடம் வந்து ‘தாத்தா உனக்கும் எனக்கும் போட்டி’ என சொல்வது போல் இருக்கிறது. திமுக 70 வருடங்களாக நீடித்து நிற்கும் ஒரு கட்சி.. அவ்வளவு சுலபத்தில் அதை ஒழிக்க முடியாது.
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தேர்தலை குறி வைத்து தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார்.. உள்ளுக்குள் ஒரு நெருப்பு இருக்க வேண்டும். ஆனால் விஜய்க்கு அது இல்லை. இவர் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. ஆனால் நான்தான் முதல்வர்.. வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கிறது என்கிறார்.இவர் சொல்லும் ரசிகர்கள் வந்து ஓட்டு கூட போட மாட்டார்கள்.  தேர்தல் நடைபெறும் போது வந்து விசில் அடித்து கிடைக்கும் வாக்குகளையும் கிடைத்து விடுவார்கள். நடிகருக்கு கூடும் கூட்டம் வேறு.. ஓட்டு போடுவது என்பது வேறு..கண்டிப்பாக இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெரும் என அவர் கூறினார்.

மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் வரைக்கும்தான் காங்கிரசுக்கு மதிப்பு.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்கள். 2029 பாராளுமன்ற தேர்தலில் ராகுல் பிரதமராக விரும்பினால் திமுக கூட்டணியில்தான் நீடிக்க வேண்டும்.

ஏனெனில் அந்த கூட்டணியை கட்டுப்படுத்துவது முக ஸ்டாலின்தான். திமுகவை ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசுகிறார். 75 வருட அனுபவம் உள்ள கட்சியை 30 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு கட்சியால் ஒழித்துவிட முடியாது. புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என அவர் சொல்லியிருக்கிறார்.