1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rumour spread that tvk talking with nda alliance

80 சீட்!.. துணை முதல்வர் பதவி!.. விஜயிடம் டீல் பேசுகிறதா என்.டி.ஏ கூட்டணி?...

vijay amitshah
2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயின் தவெக கட்சி இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இத்தனைக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என விஜய் சொல்லியும் எந்த கட்சியும் அவர் பக்கம் வரவில்லை.. அதேநேரம், காங்கிரஸ் மட்டும் தவெகவுடன் சில நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தி அதன் பின் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது.

ஒருபக்கம் கடந்து சில நாட்களாகவே அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமர் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.. ஆனாலும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது..

இந்நிலையில், ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.. அதிமுக மற்றும் பிஜேபி தரப்பில் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது தவெக தரப்பு 80 தொகுதிகள்ளை கேட்டதகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தவெகவுக்கு 60 தொகுதிகளை கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி முன் வந்ததாகவும், துணை முதல்வர் பதவி கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது..

விஜய் 20 சதவீத வாக்குகளை வாங்குவார் என பாஜக நம்புகிறது.. எனவே எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை கொண்டு வரும் முயற்சியில் அமித்ஷா இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.. தொலைப்பேசியில் அமித்ஷா விஜயிடம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
துபாயில் திடீரென 19 இந்தியர்கள் கைது.. என்ன காரணம்?