1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Business NewsVettri Tamil Nadu Investment Conclave 2026 Achieves Major Milestones

விஜய் அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு.. எந்தெந்த நிறுவனம் எவ்வளவு கோடி முதலீடு?

Tamilnadu Industry
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 
 
இம்மாநாட்டில் டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடியும், ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடியும், செயின்ட் கோபேன் ரூ.2000 கோடியும் முதலீடு செய்கின்றன. 
 
மேலும், ஜே.கே டயர் ரூ.5000 கோடியும், அக்னிகுல் காஸ்மாஸ் ரூ.400 கோடியும், ஃபீனிக்ஸ் கோத்தாரி ரூ.1000 கோடியும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.  இதனுடன் YKK நிறுவனம் ரூ.1651 கோடியும், ஷெல்லி நிறுவனம் ரூ.500 கோடியும், ஏவிட் நிறுவனம் ரூ.7000 கோடியும் மற்றும் பிட்சர் நிறுவனம் ரூ.300 கோடியும் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. 
 
இந்த மாபெரும் முதலீடுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதில் சந்தேகமில்லை.  
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சீக்கிரமா செத்துடுவேன்!.. ஜிபி முத்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!...