1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why cm vijay is silent on karnataka

கர்நாடகாவில் ஜனநாயகன் படம் ஓடுது!. அடக்கி வாசிக்கிறாரா முதல்வர் விஜய்?..

karnataka vijay
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மாட்டோம் என கர்நாடக அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு இவ்வளவு டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என அரசாணையில் இடம் பெற செய்தார்.

ஆனாலும் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு நாங்கள் தண்ணீரை திறந்து விட மாட்டோம் என கர்நாடகா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. திமுக ஆட்சியில் இருக்கும் போது இதை சட்டபூர்வமாக சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் முதல்வர் விஜய் எல்லாவற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.. சண்டை போட தேவையில்லை என்கிற மனநிலையில் இருக்கிறார்..

சமீபத்தில், தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை தர முடியாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தவெக இதற்கு இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை. குறிப்பாக முதல்வர் விஜய் இது பற்றி பேசவே இல்லை. ஆனால் அவர் கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார் என தவெக அமைச்சர் ஒருவர் பேட்டி கொடுத்தார்.

இது தவறு.. இது பேச்சுவார்த்தையில் பேசி தீர்க்க முடியாது என்ற முக ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் தற்போது கர்நாடகத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதால் கர்நாடகத்திற்கு எதிராக தமிழக முதல்வர் விஜய் ஏதாவது கருத்து தெரிவித்தால் அங்கே படத்தை ஓடவிடமாட்டார்கள் என்பதால்தான் விஜய் அமைதியாக இருப்பதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
75 நாட்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!.. வெளியான அப்டேட்!..