1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. katnataka govt order license is must to go to bar

இனிமே சரக்கடிக்க போனா அடையாள அட்டை கட்டாயம்!.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!..

bar
உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. அதேநேரம், மதுப்பழக்கம் அதிகம் உள்ள வெளிநாடுகளிலேயே குடிப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதை 21 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே அங்கே மது வாங்கி அருந்த முடியும். குடிப்பதற்கு லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மதுபான பார்களில் லைசன்ஸ் கேட்டால் காட்ட வேண்டும். 
 
ஆனால் இந்தியாவில் அப்படியெல்லாம் இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூட இந்தியாவில் சுலபமாக மதுபான கடைகளுக்கு சென்று மதுவை வாங்க முடியும். தமிழ்நாட்டில் பதினைந்து வயது சிறுவர்கள் கூட குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வருகிறர்கள்.  
 
இந்த நிலையில்தான் மதுபான பார்கள்,  பப்கள், கிளப்புகள் உள்ளிட்ட மது கிடைக்கும் அனைத்து இடங்களுக்கு செல்வதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை கட்டாயம் என கர்நாடகா அரசு அறிவித்திருக்கிறது. இளம் வயதினிலே மது பழக்கம் அதிகரித்து வருவதால் 21 வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்துவதை தடுப்பதற்காக இந்த நடைமுறையை கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கிறது..
 
அடுத்த கட்டுரையில்
தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு 21 எம்.எல்.ஏக்கள்: சபாநாயகரின் அதிரடி முடிவு...!