விவசாய குடும்பம் to Gen Z அடையாளம்!.. யார் இந்த அபிஜித் தீப்கே?..
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என விமர்சிக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற அமைப்பை தொடங்கியவர்தான் அபிஜித் தீப்கே.. ஒரே நாளில் இந்த அமைப்பின் சமூக வலைதள பக்கங்களை பல லட்சம் இளைஞர்கள் பின் தொடர்ந்தார்கள்.
இதனால் அதிர்ச்சையடைந்த பாஜக அரசு கரப்பான் பூச்சி ஜனதா தொடர்பான சமூக வலைத்தள பக்கங்களை முடக்கியது. ஆனாலும் இந்த அமைப்பை தொடங்கிய அபிஜித் தீப்கே தற்போது பாஜக அரசுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார். பாஜகவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தற்கு அபிஜித் தீப்கே காரணமாக அமைந்திருக்கிறார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இளைஞர்களும் கடந்த சில நாட்களாக டெல்லியில் போராட்டம் செய்தனர். இதன் விளைவாக தர்மேந்திர பிரதான் தற்போது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில் யார் இந்த அபிஜித் தீப்கே என பார்ப்போம்..
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்தவர் அபிஜித். பள்ளி படிப்பை முடித்த பின் உயர்கல்வியை புனேவில் படித்தார். விவசாய குடும்ப பின்னணி கொண்ட அபிஜித் இளங்கலை ஊடகவியல் பயின்றார். 202ஆம் வருடம் பாஸ்டனில் மக்கள் தொடர்பு துறையில் முதுகலை பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.
அதற்கு முன் 2020ம் வருடம் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக குழுவில் இவர் இணைந்து பணியாற்றினார். நீட் வினாத்தாள் சர்ச்சைக்காக போராட்டம் நடத்த இந்தியா வந்த அபிஜித் தீப்கே விமான நிலையத்திற்கு வெளியே வரும் போது இந்திய அரசமைப்பின் பிரதியை உயர்த்திப் பிடித்தார். தாத்தாவின் வறுமை பின்னணியில் இருந்து தந்தையின் ஓரளவு முன்னேறிய வருமான பின்னணியில் வளர்ந்த அபிஜித் தீப்கே இன்று இந்தியாவின் Gen Z வெற்றி முகமாக மாறியிருக்கிறார்.