1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk government bought twenty thousand crores

75 நாட்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!.. வெளியான அப்டேட்!..

vijay
தமிழகத்தில் 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சி இருந்த போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்தது.  2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழக நிதி நிலை தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன்படி ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை இருப்பதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு விளக்கம திமுக முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதை தவிர்க்க முடியாது.. தவெக எங்களை குறை சொல்கிறார்கள்.. இன்னும் ஐந்து வருடங்களில் தவெக ஆட்சியில் இருந்தாலும் கடன் சுமை உயரும் எனக் கூறியிருந்தார். தற்போது அவர் சொன்னது நடந்திருக்கிறது.

தவெக பொறுப்பேற்று 75 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மட்டும் ரூ.20,881 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், அதில் வட்டி மட்டுமே ரூ.14, 618 கோடி செலுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசு மொத்தம் ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் தவெக ஆட்சி முடிவடையும்போது தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கோவில் உண்டியல் பணத்தை திருடிய ஊழியர்கள்.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்த அமைச்சர் ரமேஷ்...