1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind cm joseph vijay visited puzhal prision

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

vijay puzhal
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சமீபத்தில் புழல் சிறைக்கு சென்று அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் ஆகியவற்றை திடீர் ஆய்வு செய்தார். கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் இடம், மருத்துவ வசதிகள் என எல்லாவற்றையும் அவர் நேரில் பார்த்து ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில்தான், இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக சிலர் கொழுத்திப் போடுகிறார்கள். முதல்வருக்கு நெருக்கமான ஜோதிடர்கள் சிலர் சதய நட்சத்திரம் முதல்வரின் ராசிக்கு பிரச்சனையை உண்டாக்கியிருப்பதால் இந்தாண்டு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் எனவும், அது தவெகவுக்கு பல பிரச்சினைகளை கொண்டு வரும் எனவும் கணித்தார்களாம். அதற்கு பரிகாரமாக சிறையில் அமர்ந்து சிறை உணவை சாப்பிட வேண்டும் என சில ஜோதிடர்கள் அவருக்கு ஆலோசனை கூறியதாக சிலர் சொல்கிறார்கள். அதனால்தான் முதல்வர் விஜய் புழல் சிறைக்கு விசில் அடித்திருக்கிறார் என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அதிலும் சேது என்கிற பெயரை கொண்ட காவல்துறை அதிகாரியிடம் பேச வேண்டும் என ஜோதிடர்கள் சொன்னதால்தான் புழல் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இன்ஸ்பெக்டர் சேது வசந்த் ராஜா என்கிற அதிகாரியை அவரின் இருக்கையிலேயே அமர வைத்து  முதல்வர் விஜய் பேசியதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஏதாவது ஒரு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை சிறையில் அடைக்கும் மூடில் விஜய் இருப்பதால் முன்கூட்டியே சிறைக்கு சென்று அங்குள்ள நிலையை சென்று அவர் பார்த்ததாகவும் சிலர் கொளுத்திப் போடுகிறார்கள்.

ஆனால், இன்று கூட சட்டசபையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ் ‘முதல்வருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை. தவெக அறிவுப்பூர்வமான கட்சி.. எங்களுக்கு ஜோதிடம், பில்லி சூனியம், நாக தோஷம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..