கனமழை எதிரொலி!.. தமிழகத்திற்கு வரும் காவிரி!.. விவசாயிகள் மகிழ்ச்சி!...
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு பல வருடங்களாகவே கூறி வருகிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இந்த பிரச்சனையை தமிழகம் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தியோ அல்லது சட்டப்போராட்டம் நடத்தியோதான் கர்நாடகத்திலிருந்து தமிழகம் காவிரி நீரை பெற்று வருகிறது.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையில் கே.சிவக்குமார் முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார். வழக்கம் போல் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என இவரும் கூறினார். எனவே அவரை நேரில் சந்தித்து பேச தமிழக முதலமைச்சர் விஜய் முடிவெடுத்தார்.
ஆனால் இந்த சூழலில் நாம் இப்போது சந்திக்க வேண்டாம் என டி.கே சிவக்குமார் கூறிவிட்டார். இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நட தமிழக அரசு முடிவுவெடுத்துள்ளது. இந்நிலையில்தான் கடந்த 30ம் தேதி முதல் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள பல அணைகளும் நிரம்பி வருகின்றன.
குறிப்பாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டவிருக்கிறது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.