1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. indian business man lost 45 crores business in nepal

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

nepal
இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன..

வேகமாக வந்த பெருவள்ளம் வழியில் இருந்த மண், சேறு, பாறைகள், கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு சென்றது.. அதில் பல மனிதர்களும் சிக்கினார்கள். வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர். சுமார் 4000 பேரை காணவில்லை என சொல்லப்படுகிறது..

இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த அசோக் குமார் என்கிற இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்..

வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார். இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...