தொடர்புடைய செய்திகள்
- நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..
- அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...
- 6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..
- மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமா? மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என கணிப்பு..!
- அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது!.. சபாநாயகருக்கு பழனிச்சாமி நெருக்கடி!...
திமுகவுக்கு எதிராக போரட்டங்கள் வேண்டாம்!. திருமாவளவன் கோரிக்கை....
தவெக ஆட்சியமைக்க 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களின் ஆதரவை கொடுத்தது. அதோடு தவெகவின் அமைச்சரவையிலும் விசிக இடம் பெற்றிருக்கிறது. விசிக எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக ஆ.ராசா சமூகவலைத்தளங்களில் இட்ட பதிவு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆ.ராசாவின் பதிவு விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அப்போது திமுகவினரும் போராட்டம் நடத்தினர். அங்கு, போலீசார் குவிக்க பட்டிருந்த நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திக்கொண்டனர். இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கபட்ட நிலையில் போராட்டம் மோதலாக மாறியது. அதன்பின் ஒருவழியாக போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆ.ராசாவை எதிர்த்து விமர்சிப்பதோ, திமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதோ அல்லது போராட்டங்கள் நடத்துவதோ தேவையற்றது.. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.. இயக்கத் தோழர்கள் இதனை கடந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.. கட்சியின் மறு கட்டப்பை பணியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.