விஜய் ஆட்சி தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 4,950 கோடி ரூபாய் முதலீடு.. ஜேகே டயர் நிறுவனம் அறிவிப்பு..!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான ஜே.கே. டயர் நிறுவனம், தனது சென்னை உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த 4,950 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் சாதகமான தொழில் சூழல் மற்றும் சீரிய நிர்வாகத்தின் காரணமாக, இந்த மாபெரும் முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் பயணிகள் கார் ரேடியல் டயர்களின் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கப்படும். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் காட்டி வரும் தீவிரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை தேடி வரக் காரணமாக அமைந்துள்ளது. இது, "இதுதான் மாற்றம்" என்பதை உணர்த்தும் வகையில், மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதோடு, பொருளாதார வளர்ச்சியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
முந்தைய காலங்களை விட, தற்போதைய ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான அனுமதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிக விரைவாகவும், கமிஷன் இன்றியும் வழங்கப்படுவதால், பெருநிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
ஜே.கே. டயர் நிறுவனத்தின் இந்த விரிவாக்கப் பணி, தமிழகத்தை வாகன உற்பத்தி துறையில் ஆசியாவின் முதன்மை மையமாக மாற்றும் அரசின் இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இளைஞர்களுக்கு தடையற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் வருவாயை உயர்த்தும் இத்தகைய முதலீடுகள், புதிய தமிழகத்தின் எழுச்சிக்கு சிறந்த சான்றாகும்.
Edited by Siva
