தொடர்புடைய செய்திகள்
- 35% எல்லாம் இருக்கட்டும்!. எவ்ளோ எம்.எல்.ஏ?. அதை சொல்லுங்க!.. தவெகவிடம் ஆளுநர் கறார்...
- ப்ளீஸ்!., எனக்கு ஆதரவு கொடுங்க!. திருமாவளவனுக்கு விஜய் கடிதம்..
- அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே விஜய்க்கு நல்லது!.. இல்லனா சிக்கல்தான்!...
- செக் வைத்த காங்கிரஸ்!.. முதல்வர் ஆவாரா விஜய்?.. பரபர அரசியல் களம்!..
- விஜய்க்கு ஆதரவு?.. ஸ்டாலினுக்கு அல்வா!.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா?....
தவெகவுக்கு ஆதரவு!. அதிமுகவில் மூன்று குரல்கள்!.. குழப்பத்தில் பழனிச்சாமி!..
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் ஆட்சியமைக்க தவெகவுக்கு இன்னம் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற விஜய் தரப்பு பேசியது.
இதில், விஜய்க்கு ஆதரவு கொடுப்பது பற்றி காங்கிரஸ் தற்போது சென்னையில் ஆலோசனை செய்து வருகிறது. அனேகமாக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு கொடுக்க வாய்ப்புண்டு. ஒருபக்கம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். ஆளுநர் தர்ப்பு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரசை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கும் தவெக கடிதம் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்கிற ஆலோசனை அதிமுகவில் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அதில், தவெகவுக்கு ஆதரவு கொடுப்போம்.. ஆனால் அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி சொல்வதாக தெரிகிறது. ஆனால் ஆதரவே கொடுக்க வேண்டாம் என ஓ.எஸ்.மணியன் சொல்கிறாராம். ஆனால் சிவி சண்முகமோ தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அமைச்சரவையில் பங்கேற்கலாம் என கூறுகிறாராம்..
இப்படி அதிமுகவில் மூன்று குரல்கள் எழுந்திருப்பதால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதில், விஜய்க்கு ஆதரவு கொடுப்பது பற்றி காங்கிரஸ் தற்போது சென்னையில் ஆலோசனை செய்து வருகிறது. அனேகமாக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு கொடுக்க வாய்ப்புண்டு. ஒருபக்கம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். ஆளுநர் தர்ப்பு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரசை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கும் தவெக கடிதம் அனுப்பியிருக்கிறது.
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்கிற ஆலோசனை அதிமுகவில் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி அதிமுகவில் மூன்று குரல்கள் எழுந்திருப்பதால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்