1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pudhucherry governor says about cholera

புதுவையில் அதிகம் பரவும் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழிசை பேச்சு!

tamilisai
புதுவையில் கடந்த சில நாட்களாக காலரா அதிகம் பரவி வருவதை அடுத்து மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் காலரா பரவி குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு காலரா நோய் பரவி வருவதாகவும், இதில் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் காலரா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும் அனைவரும் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் 
 
புதுவை அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து உள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
உபி முதல்வருடன் குஷ்பு: வைரலாகும் புகைப்படம்