1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2022 (16:22 IST)

காலரா பரவல்... பானி பூரிக்கு தடா போட்ட மாநகராட்சி!!

நேபாளத்தில் லலித்பூர் மாநகராட்சி  பானி பூரி விற்பனை செய்ய  தடை விதித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக காலராவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பதாகக் கூறி, பானி பூரி விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்த லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டி முடிவு செய்துள்ளது.
 
இது குறித்து மாநகர காவல்துறை தலைவர் சீதாராம் கூறியதாவது, பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானிபூரி விற்பனையை நிறுத்துவதற்கு மாநகரம் உள் ஏற்பாடுகளை செய்துள்ளது.