1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. forest department seize some animals

சியான் விக்ரம் - லார் கிப்பான் குரங்கு விவகாரம்!.. 11 அரியவகை விலங்குகள் மீட்பு!...

chiyan vikram
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சியான் விக்ரம் குரங்கு ஒன்றுடன் நேரம் செலவழிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால், அது அரிய வகை லார் கிப்பான் குரங்கு எனவும் வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்தது எனவும் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின் அந்த குரங்கின் உரிமையாளர் வேறொருவர் என்பது அவர் கடத்தில் காரர் ஒருவரிடமிருந்து அந்த குரங்கை வாங்கியதாகவும் செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து வனத்துறை விசாரணையில் இறங்கியது. அதோடு, குரங்கின் உரிமையாளர் குறித்த தகவல்களை சியான் விக்ரம் மூன்று நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என வனத்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், விக்ரமின் குடும்பத்திற்கு லார் கிப்பான் குரங்கை கொடுத்த ஈரோட்டைச் சேர்ந்த கேசவநாதன் வீட்டிலிருந்து 11 அரியவகை விலங்குகளை வனத்துறை பறிமுதல் செய்துள்ளனர். 7  ஷெர்வால் கேட் எனும் நெடுங்காற் பூனைகள், இரு டபெட் கேப்புசின் என சொல்லப்படும் அடற்சுருட்டை வால் குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 3 லார் கிப்பான் குரங்குகளில் ஏற்கனவே ஒன்று இறந்துவிட்ட நிலையில் மற்ற இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை வண்டலூர் உயிரியில் பூங்காவில் ஒப்படைத்துப் பராமரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.  
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
யுஜிசி நெட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய மனு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு