வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (23:10 IST)

அண்ணாமலைக்கு முதல்வராகும் தகுதியுண்டு- விஜய் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பேரரசு. இவர் இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், இயக்குனர் பேரரசு  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் முதல்வராகும் தகுதியுண்டு எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :திமுகவில் அண்ணா, கலைஞர் போன்ற பேச்சாளர்கள் இருந்தனர். அதிமுகவில் எம்.ஜி.ஆர் முகம் இருந்தது.பாஜகவில் பேச்சாளர்கள் இல்லை. மக்களுக்கு அறிமுகமான முகங்கள் இல்லை. ஆனால், இப்போது, அண்ணாமலையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவருக்கு தமிழக மக்கள் எங்கு சென்றாலும் வரவேற்பு அளிக்கின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் முதல்வராகும் தகுதியுண்டு எனத் தெரிவித்துள்ளார்.