செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (16:21 IST)

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை

gyper
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடாமல் தொடங்கியது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சுகாதார பள்ளியை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டார் 
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என கவர்னர் சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தும், தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது 
 
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழ் தாய் வாழ்த்து நடுவில் பாடப்பட்டது. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், ‘இனிவருங்காலங்களில் ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என்று கூறினார்