1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. procedures for floor test today in assembly

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?!.. நடைமுறைகள் என்ன?..

vijay
தமிழக சட்டசபையில் 9 வருடங்களுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கிறது. விஜய் முதல்வராக மாறியிருக்கிறார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்தால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற காட்ட வேண்டும் என்பது விதிமுறை., எனவே தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். அதையடுத்து இன்று தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது..

இதில் என்னென்ன நடைமுறைகள் எனக்கு தெரிந்து கொள்வோம்:

குரல் வாக்கெடுப்பு அல்லது டிவிசன் முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அமைச்சரவை மீது நம்பிக்கையை கோரி முதல்வர் விஜய் ஒரு தீர்மானத்தை கொண்டு வருவார். விவாதத்திற்கு பின் மெஜாரிட்டி டெஸ்ட் தீர்மானத்தை சபாநாயகர் முன்மொழிவார்.. குரல் வாக்கெடுப்பு நடந்தால் எம்எல்ஏக்கள் ஆம் அல்லது இல்லை என்று கூறுவார்கள்.

ஆறு டிவிஷன்களுக்கு ஏற்ப டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு டிவிசனிலும் ஆதரிக்கும், எதிர்க்கும் எம்எல்ஏக்கள் தனியாக நிற்பார்கள். எண்ணிக்கை கணக்கிடப்பட்டு சபாநாயகரிடம் வழங்கப்படும் மெஜாரிட்டி டெஸ்டின் வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார்..

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். அவையில் இருக்கும் எம்எல்ஏக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.. இதற்காக அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களின் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் (எடுத்துக்காட்டாக 230 பேரில் 116 பேர்) ஆதரவளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும். இன்று சட்டசபை கூடியபின் காலை 9.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடைபெறவிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்