1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk warning against mlas who support tvk

தவெகவை ஆதரிச்சி ஓட்டு போட்டா எம்.எல்.ஏ பதவி காலி!. அதிமுக எச்சரிக்கை!..

eps vijay
தமிழக சட்டசபையில் இன்று காலை 9:30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த நம்பிக்கை தீர்மானத்தை முன்னெடுக்கிறார். அனைத்து எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

அதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெகவுக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் திருப்பத்தூர் எம்எல்ஏ வாக்களிக்க முடியாத நிலை என்பதால் எண்ணிக்கை 119 ஆக இருக்கிறது. அதேநேரம் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 24 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது.
நேற்று முதல்வர் விஜய் நேரில் சென்று சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரை நேரில் சந்தித்தார். ஒருபக்கம், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் என அதிமுக எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி அவர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதிமுக அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?!.. நடைமுறைகள் என்ன?..