1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay will win floore test today

இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!. யாரெல்லாம் விஜய்க்கு ஆதரவு?..

vijay
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகியுள்ள நிலையில் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது
. முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரவிருக்கிறார். ஏற்கனவே தவெகவுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.

ஆனால் அதில் ஒரு எம்எல்ஏ வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே மொத்த எண்ணிக்கை 119-ஆக இருக்கிறது. அதேநேரம், அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ் தவெகவுக்கு ஆதரவு வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளார். எனவே எண்ணிக்கை 120ஆக இருக்கிறது.

மேலும் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணு தலைமையிலான அதிமுகவில் இருந்து தலைமையிலான 26 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க திட்டமிட்டுருக்கிறார்கள். எனவே 146 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியிருக்கிறது.

தமிழக சட்டசபையில் 9 வருடங்களுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஒருபக்கம் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் மீது சட்டப்படி அதிமுக கொறடா நடவடிக்கை எடுப்பார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்திருக்கிறார். எனவே தமிழக அரசியலில் இன்று பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.