வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு?!.. வெளியான அப்டேட்!...
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளையும் அசைத்தவாறு அவர் காட்டிய மேனரிசம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
முக ஸ்டாலினையே தோற்கடித்துவிட்டர் என விஜயின் ஆதரவாளர்களும், தவெகவினரும் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேநேரம் வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. மேலும் சமீபத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..
அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது வி.எஸ்.பாபு நலமாக இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ் பாபுவின் உடல் சீராக இருக்கிறது.. அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.