2027 ஜனவரி எய்ம்ஸ் மருத்துவமனை ஓப்பன்!.. மத்திய அரசு தகவல்!...
மதுரையில் 8 வருடங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதை வைத்து திமுக அரசியலும் செய்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதி உதயநிதி ஸ்டாலின் அதைக்காட்டியே தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தார். அது திமுகவுக்கு வெற்றியும் தேடித் தந்தது. மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் இன்னமும் முடிந்த பாடில்லை. கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை என பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..
இந்நிலையில்தன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இது பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். ஆகஸ்ட் 31ன் படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. இந்த செப்டம்பர் மாதத்திற்குள் 59 சதவீத பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.