1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. private bus increased the ticket price in tn

வெற்றி பயண திட்டம் எதிரொலி!.. தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்வு..

private bus
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 2ம் தேதி தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாதாரண பேருந்து, எக்ஸ்பிரஸ், LSS, Deluxe, புறநகர் சாதாரண மற்றும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள், சிறுமிகள், திருநங்கள் என எல்லோரும் இலவசமாக பயணிக்க முடியும்...

இந்த திட்டத்தால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் பயணிக்க முடியும் என்பதால் பெரும்பாலான பெண்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே, தனியார் பேருந்துகள் கூட்டம் குறிந்து வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், பல தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலையை உயர்த்திவிட்டனர். தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை வரையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வயதானவர்கள் வாக்களிப்பதில் சிக்கல்.. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் குளறுபடி!...