1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madhuranthagam dharapuram by election tomorrow

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!.. ஏற்பாடுகள் தீவிரம்..

maduranthagam
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தபின் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். எனவே அந்த ஏழு தொகுதிகளும் காலியாக இருக்கிறது. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது..

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6ம் தேதியான நாளை இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், சில தொகுதிகளில் பதட்டமானவை என அறியப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை எண்ணப்படவிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இனி காங்கிரஸ் உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. திமுக திட்டவட்டம்...