1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. elders feeling dificult to vote in by election

வயதானவர்கள் வாக்களிப்பதில் சிக்கல்.. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் குளறுபடி!...

votepolll
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதியான இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதல்நிலை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை அந்த தொகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தவெக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.. மதுராந்தகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.99 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 17.55 வாக்குகளும் பதிவாகியிருக்கிறது.

ஒருபக்கம், இந்த தேர்தலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அவர்களுக்கு சக்கர நாற்காலியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அவர்கள் நடந்து வந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்கவே சிரமப்பட்டு வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் சிலர் மட்டுமே அவர்களை கைத்தாங்கலாக பிடித்து வாக்குப்பதிவு செய்ய உதவி செய்து வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!. 9 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்..