வருவாய் இழப்பு!.. வெற்றிப் பயண திட்டத்தால் காத்து வாங்கும் தனியார் பேருந்துகள்!..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் வெற்றி பயணத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதாவது தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அது.
மாநகர மற்றும் நகர சாதாரண பேருந்துகள், எக்ஸ்பிரஸ், L.S.S. டீலக்ஸ், தாழ்தள பேருந்துகள், புறநகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளுக்கு செல்லும் சாதாரண பேருந்துகள் உட்பட தமிழக போக்குவரத்து துறையில் செயல்படும் 12,691 அரசு பேருந்துகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலான பெண்கள் அரசு பேருந்துகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
மூன்று நாட்களில் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. விரைவில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.