1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. premalatha and adhav arjuna clash in assembly

இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா Vs ஆதவ் அர்ஜுனா வாக்குவாதம்!...

premalatha
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைத்ததை தாங்கிக் கொள்ள முடியாத திமுக சட்டசபையில் தவெகவுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது..

எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்றவர்கள் எழுந்து பதில் கூறி வருகிறார்கள். அதிலும் யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்து பதில் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சட்டமன்றத்தில் புகார் கூறியிருந்தார்..

இந்நிலையில்,  இன்று சட்டசபையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா ‘எப்போது பார்த்தாலும் சண்டை சண்டை என்று செல்கிறது.. இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்’ எனக்கூறினார்..

அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா ‘அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை இல்லை.. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும்.. உண்மைக்கு மாறாக பேசும் போது தான் நாங்கள் எழுந்து பதில் சொல்கிறோம்.. எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது.. அதை வைத்து கேஸ் பற்ற வைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம்.. கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்’ என பதிலடி கொடுத்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கும்மிடிப்பூண்டியில் 2 ஏ.டி.எம் மையங்களை உடைத்த கும்பல்!.. 12 லட்சம் கொள்ளை!...