1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna talk in assembly video goes viral

30 வருஷத்துக்கு முன்னாடி வெறும் சைக்கிள்!.. இப்ப கோடீஸ்வரர்!.. சட்டசபையில் தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!..

adhav arjuna
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் சட்டசபையில் தவெக அமைச்சர்களுக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஊழல்கள் பற்றி  தவெக அமைச்சர்கள் பேசினால் உடனடியாக திமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ‘ஆதாரம் கொடு.. ஆதாரம் கொடு’ என கத்துகிறார்கள்.. அமளியில் ஈடுபடுகிறார்கள். அதோடு, தவெக அமைச்சர்களை மிரட்டுவது போலவும், அடிக்க வருவது போலவும் ஓடி வருகிறார்கள். கைகளை தூக்கி மிரட்டுகிறார்கள்.

இந்நிலையில் இன்று சட்டசபையில் கனிமவள சுரங்கங்கள் ஊழல் பற்றி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘கனிமவள சுரங்கங்களுக்கு இவர்களே லைசென்ஸ் கொடுத்தார்கள்.. இவர்களின் குடும்ப உறுப்பினர்களே அந்த சுரங்கங்களை நடத்தினார்கள்.. ஆனால் அது பற்றி பேசினால் ‘ஆதாரம் கொடு.. ஆதாரம் கொடு’ என்கிறார்கள். இந்த பினாமிகளை எல்லாம் பிடித்து உள்ளே வைத்தால் எழுந்து.. எழுந்து பேசுபவர்களுக்கும்.. அவர்களுக்கும் இடையே உள்ள உறவு தெரிந்து விடும்..

நாங்கள் எந்த கனிம சுரங்கத்தின் மீதும், மணல் மீதும் கை வைக்கமாட்டோம்.. பொதுமக்களின் சொத்தை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என எங்கள் முதல்வர் கூறியுள்ளார். யாரெல்லாம் பொதுமக்கள் சொத்துக்கள் மீது கை வைக்கிறார்களோ அவர்களை தேர்தல் அரசியலில் இருந்து மக்களே தூக்கி எறிவார்கள். கடந்த ஆட்சியில் மதுரையை சேர்ந்த ஒரு அமைச்சர் கனிம சுரங்கங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். அவர் இப்போது சட்டசபைக்கே வரமுடியவில்லை. இதுதான் புதிய அரசியல்..

ஆதாரம்..ஆதாரம் என கேட்கிறார்கள். யாரெல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு சைக்கிளில் வந்து இப்போது பெரிய பெரிய பங்களாக்களை, கல்லூரிகளை, மருத்துவமனைகளை கட்டியிருக்கிறார்களோ.. அவர்கள்தான் ஆதாரம்.. மக்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.. அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை... அதுதான் ஆதாரம்’ என ஆவேசமாக பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
4,133 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.. ஆனால் 19,502 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.. எப்படி?